அமெரிக்காவில் அனுமதி?!-‘ஆப்’ விவகாரத்தில் யாருக்கு ஆப்பு??

எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.சீனா தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்புகளை தன் அண்டை நாடுகளிடையே ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் சீனாவிற்கு எதிரான மனநிலை இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. இதையடுத்து சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.

சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது போன்ற பலத்த கோஷங்கள் சமூக வலைதளங்களிலும், இந்தியாவிலும் அதிகரிக்க துவங்கி விட்ட நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டும் வருகின்ற  டிக்டாக், ஷேர்இட், ஹலோ போன்ற 59 மொபைல் போன் செயலிகளை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.

இச்செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்தியாவில் இச்செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இச் சீன செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஏன்? இந்தியாவை போன்று அமெரிக்காவிலும், டிக் டாக் உட்பட பல சீன செயலிகளுக்கு, தடை விதிக்க கூடாது என்று அரசாங்க தகவல்கள் அடுத்தடுத்து பறக்கிறது.

அமெரிக்காவும் விரைவில் தடை விதிக்க உள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது. எல்லைப்பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்க நினைத்தது சீனா ; ஆனால் ஒட்டு மொத்த ‘ஆப்’பையும் சீனாவிற்கே திருப்பியது இந்தியா;எதையும் திருப்பி கொடுத்துவிடுவது எங்கள் பழக்கம் என்று இந்தியா சிரிப்பதாக வர்ணையாளர்கள் வாய்சிரிக்கின்றனர்.

author avatar
kavitha