“யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை.. எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான்”- வடகொரிய அதிபர் கிம்!

யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக தனிமையான நாடுகளில் ஒன்று, வடகொரியா. அந்நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன், உலகின் மிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்படுகிறார். வடகொரியாவின் அனு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி, பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா நடத்தி வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சி கொரியாவின் ஐந்தாம் ஆண்டு மாநாட்டில் பேசினார். இதுகுறித்து பேசிய அவர், எங்கள் புரட்சிக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை வீழ்த்துவதில் குறியாக இருப்பதாகவும், அங்கு யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை, வட கொரியாவுக்கு எதிரான கொள்கையின் உண்மைத்தன்மை, ஒருபோதும் மாறாது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு உலகளவு பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், இதற்கு முன் இரு நாடுகளும் எதிரிகளாக இருந்து வந்ததே ஆகும். அதுமட்டுமின்றி, கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பாலும் இருநாட்டு உறவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.