#அமெரிக்கர்கள் பைத்தியங்கள்!?சீன பரபர பாய்ச்சல்

அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் முற்றிவிட்டதாக சீன வெளியுறவுத்துறை  பரபர குற்றச்சாட்டுடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாகவே சீனா-அமெரிக்கா இடையே கருத்து மோதல்கள் வெடித்து வரும் நிலையில் அமெரிக்கா சீன அதிகாரிகளுக்கு விசா மறுப்பு , 2ம் கட்ட பொருளாதாரத்தடை  போன்ற பல கட்டுப்பாட்டுகளை விதித்து வந்தது.இதனால் அமெரிக்கா மீது கடும் சீற்றத்தில் சீனா உள்ளதாக சர்வதேசம் கிசுகிசுத்து வருகிறது.

இந்நிலையில் தான் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிர் பார்  அமெரிக்கா  பொருளாதார வல்லரசு நாடாக இருப்பதைப் பொறுக்க முடியாமல் தனது கம்யூனிச சித்தாந்தத்தை உலக முழுவதும் பரப்புவதற்காக  அமெரிக்காவில் பொருளாதார  சீர்குலைவை ஏற்படுத்த முயற்சிப்பதாக பகிரங்கமாக சீனா மீது குற்றச்சாட்டிய நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவுத்துறை  அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா அபாண்டமாக குற்றம் சாட்டுவதாகவும்; அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்து முற்றி  விட்டதாக  விமர்ச்சித்ததோடு மட்டுமின்றி கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

author avatar
kavitha