அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தகமான அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 1,25,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது.  மேலும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,300 ரூபாயாக (18 டாலர்) ஊதிய உயர்வு அறிவித்துள்ளது. அமேசானில் 1.25 லட்ச கிடங்கு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அமேசான் டெலிவரி சர்வீசஸின் துணைத்தலைவர் டேவ் போஸ்மேன், இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ரூ.2,19,000 வரை சிறப்புத்தொகையாக வழங்க உள்ளது.

மேலும், அமெரிக்காவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தளவாடங்களை இயக்க இம்மாத துவக்கத்தில் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2,200 ஊழியர்களை கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் கிடங்கிற்கு வரும் அக்டோபர் மாதம் வேலைக்கு ஆட்கள் எடுக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் கார்ப்பரேட் வேலைகளுக்கு சுமார் 55,000 பேருக்கு அமேசான் நிறுவனத்தில் ஆட்கள் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.