36 மணிநேரம் 750 கோடி! 6 நாள் 35,000 கோடி! வெளுத்துவங்கும் இணையதள ஷாப்பிங் திருவிழா!

ஒவ்வொரு வருடமும் இதே நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு இந்தியாவில் இணையதள ஷாப்பிங் தளங்கள் அதிரடி ஆபர்களை கொடுத்து அதிகப்படியான விற்பனை செய்து வரும். அந்த வகையில் இந்த வருடமும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்தில் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

அமேசான் வலைத்தளத்தில் நேற்றைய தினம் முதல் 6 நாட்களுக்கு அதிரடி நபர்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. ஆஃபர் தொடங்கிய 36 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 750 கோடி வருமானம் எட்டியுள்ளது. சாதாரணமாக நடைபெறும் வியாபாரதினை விட இது 10 மண்டங்கு அதிகம் என அமேசான் தெரிவித்துள்ளது.

அதேபோல ப்ளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் என அஃபர் கொடுத்திருந்தது. இந்த தளத்திலும், வீரப்பனை ஜோராக நடந்து வருகிறது. இதில் இந்த 6 நாளில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் ஆகும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் சென்றாண்டை விட இந்தாண்டு அதிகம் 2 மண்டங்கு வருமானம் வரும் எனவும் ப்ளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.