ghee

சருமத்தை அழகாக்கும் நெய்யின் அற்புத குணங்கள்..!

By

நெய் சரும ஆரோக்கியத்தை எந்தெந்த வகையில் மேம்படுத்துகிறது தெரியுமா..?

நம்மில் பெரும்பாலானவர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும்,  சருமத்தை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அதன்படி, மருந்தகங்களில் அல்லது அழகு நிலையங்களில் நமது சருமத்தை பொலிவாக்கக்கூடிய, மெருகூட்டக்கூடிய பல வகையான கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகிக்கிறோம்.

ஆனால் இயற்கையான முறையில், பக்கவிளைவுகள் இல்லாமல் சருமத்தை பராமரிப்பதில் நெய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில் ஆனால் நெய் நமது சருமத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் நெய் சரும ஆரோக்கியத்தை எந்தெந்த வகையில் மேம்படுத்துகிறது என்பது பற்றி பார்ப்போம்.

சருமத்தை ஈரப்பதமாக்குகிறது

facebeauty
facebeauty [Imagesource – Representative]

நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது சருமத்திற்கு நீண்ட கால நீரேற்றத்தை அளித்து, அது வறண்டு போகாமல் தடுக்கிறது. குளிப்பதற்கு முன் உங்கள் தோலில் நெய்யை மெதுவாக தேய்க்கலாம், இது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றும்.

வெடித்த உதடு 

mouth
mouth [Imagesource : Indianexpress]

உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகளால் நீங்கள் எப்போதும் எரிச்சலடைகிறீர்களா? அப்போது நெய் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளுடன், நெய் உதடுகளின் வெடிப்புகளுக்கு சிகிச்சையளித்து, ஆரோக்கியமளிக்கிறது. மேலும் இது உதடுகளை மிருதுவாக்குகிறது.

நச்சுக்களை வெளியேற்றுகிறது

immunity
immunity [Imagesource : representative]

நெய்யில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமான அமைப்பை ஆதரிக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. செரிமானம் நன்றாக இருக்கும் போது, உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேற்றப்பட்டு, தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கும்.

கண் கருவளையம்

eyecream
eyecream [Imagesource : Representative]

கண்ணுக்குக் கீழே உள்ள கருமையான திட்டுகள் பார்ப்பதற்கு விரும்பத்தகாததாக இருக்கும். ஆனால் அந்த பகுதியைச் சுற்றி சிறிது நெய்யைத் தேய்ப்பதன் மூலம் சருமம் பளபளப்பாக மாறும்.  அந்த இடத்தில் நெய் தடவுவதன் மூலம் கருவளையங்களை படிப்படியாக மறைந்து விடும்.

சருமத்தை இளமையாக மாற்றுகிறது

Eyecare
Eyecare [Imagesource : Representative]

நெய் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும்சில பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது சுருக்கங்கள் மற்றும் வயதான ஆரம்ப அறிகுறிகளைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.