31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

கோடை வெயிலுக்கு குளுகுளு..பலவித அம்சங்களுடன் வரவிருக்கும் அற்புதமான புதிய ஏசிகள்..! உங்களுக்காக இதோ..!

கோடை வெயிலை குறைப்பதற்காக பலவித அம்சங்களுடன் வரவிருக்கும் புதிய ஏசிகளின் விலை மற்றும் அம்சங்களை காண்போம்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அதிக வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் என்பது தாங்க முடியாது நிலைமைக்கு மக்களை கொண்டு செல்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு மக்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை வைத்து தங்களை காப்பாற்றிக் கொள்கின்றனர்.

AC
AC [Image Source : Cielo WiGle]

அதுமட்டுமல்லாமல் தங்களது வீட்டில் ஏர் கண்டிஷனர் (AC), ஏர் கூலர் (Air Cooler) போன்றவற்றை வெயில் காலங்களில் குளிர்ச்சி தருவதற்காக வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக LG, Panasonic, Voltas போன்ற முக்கிய நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏசி மாடல்களைக் அறிமுகப்படுத்துகின்றன.

அந்தவகையில் இந்த ஆண்டு அறுமுகப்படுத்தப்பட உள்ள பல அம்சங்கள் கொண்ட ஏசி மாடல்கள் சிலவற்றைக் காண்போம்.

Panasonic 2 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC:

Panasonic-ன் இந்த ஸ்மார்ட் ஏசி ஆனது 2 டன் கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த ஏசி 181 சதுர அடி முதல் 260 சதுர அடி வரையிலான பரப்பளவைக் கொண்ட பெரிய அளவிலான அறைக்கு ஏற்றதாக இருக்கும். Wi-Fi வசதியுள்ள இந்த ஏசியை மொபைலில் உள்ள Miraie செயலி மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம்.

Panasonic AC
Panasonic AC [Image Source : amazon]

கூடுதலாக, அலெக்சா மற்றும் கூகுள் மூலம் இந்த ஏசியைக் கட்டுப்படுத்தலாம். PM 0.1 காற்று சுத்திகரிப்பதற்கான வடிகட்டி மற்றும் காற்றோட்டத்தை எளிதாக்கும் 4 வே ஸ்விங்கைக் கொண்டுள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.65,990 ஆக உள்ளது.

LG 1.5 Ton 5 Star DUAL Inverter Window AC :

எல்ஜி விண்டோ ஏசி ஆனது 1.5 டன் கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த ஏசி 150 சதுர அடி முதல் 160 சதுர அடி வரையிலான பரப்பளவைக் கொண்ட அறைக்கு ஏற்றதாக இருக்கும். இந்த ஏசி அறையின் அழகை உயர்த்தும் தனித்துவமான மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் வருகிறது.

LG DUAL Inverter Window AC
LG DUAL Inverter Window AC [Image Source : amazon]

மேலும், இன்வெர்ட்டர் ஏசி குறைந்தபட்ச ஆற்றல் நுகர்வுடன் விரைவாக குளிர்ச்சியை தருகிறது. புகை மற்றும் மாசு படிந்த காற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க Ocean Black Protection தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏசியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம். இதன் தற்போதைய விலை ரூ.38,990 ஆக உள்ளது.

Lloyd 2.0 Ton 3 Star Inverter Split AC :

லாயிட் 3-ஸ்டார் ஏசியானது 2 டன் கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த ஏசி 215 சதுர அடி வரையிலான பரப்பளவைக் கொண்ட அறைக்கு ஏற்றதாக இருக்கும். காலநிலைக்கு ஏற்ப அதாவது வெப்பநிலை 52˚C-க்கு மேல் உயர்ந்தாலும் வெப்பநிலையை வெளிக்காட்டாமல் குளிர்ச்சியை அளிக்கிறது.

Lloyd AC
Lloyd AC [Image Source : amazon]

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள காப்பர் சுருள் அதிக அழுத்தத்தைத் தாங்கி ஏசியின் ஆயுளை நீடிக்கச்செய்கிறது. இந்த ஏசியானது 45 வினாடிகளில் 18°C வரை குளிர்ச்சியை அளிக்கிறது. இதன் தற்போதைய விலை ரூ.49,490 ஆக உள்ளது. 

Samsung 1 Ton 3 Star Inverter Split AC:

இந்த சாம்சங் 3-ஸ்டார் ஏசி சக்திவாய்ந்த மற்றும் மென்மையான குளிர்ச்சியை தரக்கூடிய 23,000 மைக்ரோஹோல்களுடன் இயங்குகிறது. 1 டன் கொள்ளளவு கொண்ட இந்த ஏசியில் உங்கள் வசதிக்கேற்ப குளிரூட்டும் திறனை 40% முதல் 120% வரை மாற்றிக் கொள்ளலாம்.

Samsung AC
Samsung AC [Image Source : amazon]

இந்த ஸ்மார்ட் ஏசியை மொபைலில் உள்ள Wi-Fi மூலமாகவோ அல்லது வெல்கம் ஹோம் (Welcome Home) மூலமாகவோ எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். மின்சார செலவைக் குறைக்க உதவும் இந்த ஏசியின் தற்போதைய விலை ரூ.30,900 ஆக உள்ளது. 

Voltas 1 Ton 3 Star, Inverter Split AC:

இந்த வோல்டாஸ் ஏசி கடைசியாக இருந்தாலும் மற்ற ஏசிகளை போல அதிக சக்தி வாய்ந்தது. இது 4 குளிரூட்டும் முறைகளுடன் வருவதால் உங்கள் வசதிக்கேற்ப 20% முதல் 120% வரை குளிரூட்டும் திறனை மாற்றிக் கொள்ளலாம். தேவையான காற்றோட்டத்தை வழங்குவதன் மூலம் அறையில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடு அளவைக் குறைக்க உதவுகிறது.

Voltas AC
Voltas AC [Image Source : amazon]

1 டன் கொள்ளளவு கொண்ட இந்த ஏசியானது அறையில் உள்ள காற்று சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உறுதிசெய்ய தூசி எதிர்ப்பு வடிகட்டியைக் கொண்டுள்ளது. இது 100 சதுர அடி கொண்ட அறைக்கு சிறந்த ஏர் கண்டிஷனர்களில் ஒன்றாகும். இந்த ஏசியின் தற்போதைய விலை ரூ.31,950 ஆக உள்ளது.