காயாக உண்டால் விஷம்.. பழமாக உண்டால் மருந்து! 48 மணிநேரத்திற்குள் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்க்கும் அதிசய பழம் பற்றி அறிவீரா?

ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய

By soundarya | Published: Mar 09, 2019 06:59 PM

ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி - இருமல் நம் உடலில் ஏற்படும் சாதாரண மற்றும் பொதுவான நோய்த்தொற்றுகளான சளி - இருமல் போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தும் ஆற்றலை கொண்டது, இந்த எல்டர்பெர்ரி பழங்கள். இந்த நோய்த்தொற்றுகள் உண்டான நேரத்திலிருந்து அடுத்த 48 மணிநேரத்திற்குள் அவற்றை இல்லாமல் செய்யும் ஆற்றலை எல்டர்பெர்ரி பழங்கள் கொண்டுள்ளன. காய்ச்சல் எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் 5 நாட்களுக்குள் சரியாக்கும் ஆற்றல் கொண்டது எல்டர்பெர்ரி; 15 மில்லிலிட்டர் எல்டர்பெர்ரி சிரப்பை 5 நாட்களுக்கு 4 வேளைகள் உட்கொண்டு வந்தால் காய்ச்சல் உடனடியாக குணமடைந்து விடும். பெரியவர்கள் 10 மில்லி அளவு மற்றும் சிறியவர்கள் 5 மில்லி அளவு அளவில் எல்டர்பெர்ரி சிரப்பை உட்கொண்டு வந்தால், விரைவில் காய்ச்சல் சரியாகிவிடும். தோல் பராமரிப்பு மனிதர்களின் சரும பராமரிப்பிற்கு தேவையான அத்தனை சத்துக்களையும் வைட்டமின்களையும் எல்டர்பெர்ரி கொண்டுள்ளது; எல்டர்பெர்ரியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ என பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகையால் இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அழகான தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் வயதாவதை தடுக்கவும் இது உதவும். கொடிய நோய்கள் கொடிய நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்களை தடுக்கவும், நோயின் தீவிரத்தை குறைத்து அவற்றை குணப்படுத்தவும் இந்த எல்டர்பெர்ரிகள் அதிகம் உதவுகின்றன. மேலும் உடலின் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றை பலப்படுத்தவும் இந்த பழங்கள் உதவுகின்றன.
Step2: Place in ads Display sections

unicc