,
Sai Sudharsan super batting

அசர வைத்த ஆட்டம்…அதிரடி காட்டிய சாய் சுதர்ஷன்…வைரலாகும் வீடியோ.!!

By

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் வீரர் சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடினார் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் எந்த அளவிற்கு அவர் அருமையாக விளையாடினாரே அதே அளவிற்கு டிஎன்பிஎல் தொடரிலும் அருமையாக விளையாடி வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்ஷன் 50 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார்.

இன்னும் 10 ரன்கள் எடுத்திருந்தால் சதம் விளாசியிருக்கலாம். ஆனால், ரன்-அவுட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும், அவர் நேற்றைய போட்டியில் 7 பவுண்டரிகள், மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி வானவேடிக்கை காட்டினார். அதற்கான வீடியோவும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்போலவே, திருப்பூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி 86 ரன்கள் எடுத்திருந்தார்.


தொடர்ந்து அருமையாக விளையாடி வரும் சாய் சுதர்ஷனை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அடுத்தாக 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.