60 வயதான பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க போகிறாரா அமலாபால்.!

பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா அவர்களுக்கு ஜோடியாக நடிக்க

By ragi | Published: Jul 05, 2020 12:45 PM

பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா அவர்களுக்கு ஜோடியாக நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால். தற்போது இவர் கே. ஆர். வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் 'ஆடுஜீவிதம்', தமிழில் 'கேடவர்', தெலுங்கில் 'லஸ்ட் ஸ்டோரீஸ்' என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் 60வயதான பிரபல நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா அவர்கள் நடிக்கவுள்ள படத்தில் அமலாபால் அவர்களை ஜோடியாக நடிக்க வைக்க கோரி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இயக்குகிறார்.இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc