சலூன் கடைகளை திறக்க அனுமதி.! ஒருவாரத்திற்கு எல்லைகள் மூடல் - டெல்லி முதல்வர் உத்தரவு.!

டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

By balakaliyamoorthy | Published: Jun 01, 2020 02:15 PM

டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் unlock1.0 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், டெல்லியில் சலூன் கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்பாக்கள் மூடியே இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதையயடுத்து டெல்லியில் ஆட்டோ மற்றும் இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஒரு வாரத்திற்கு எல்லைகள் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடைகளை திறக்க நாங்கள் சில விதிமுறையை பின்பற்றி வந்தோம், ஆனால், மத்திய அரசு அத்தகைய எந்த விதியையும் கூறவில்லை, எனவே எல்லா கடைகளும் இப்போது திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc