மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் “முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களின் நிதி ஆதாரங்களின் மூலம் ஆதரவற்ற, வயதான முஸ்லிம் விதவைகள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் ஆகியோருக்கு உதவிடும் வகையில் நிதி உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.