ரஜினி உடன் கூட்டணியா? விளக்கமளிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, அவர் துணை முதல்வரது கருத்துக்கு எதிர்மறையாக பதிலளித்து கருத்து கூறியுள்ளார். 

ஜனவரி மாதம் ரஜினி அரசியலுக்கு வருவதாக தற்பொழுது அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி, அரசியல் களத்தில் இறங்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் முழுவதிலும் இது குறித்து தான் கருத்துக்கள் கூறப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர், ரஜினி அரசியல் வருவதை வரவேற்கிறோம் என கூறியிருந்தார். மேலும் வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் எனவும் எதிர்காலத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் துணை முதல்வரின் கருத்து குறித்து கேட்ட பொழுது ரஜினியுடன் கூட்டணி அமைப்பேன் என்று பேசியது ஓபிஎஸ் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய கருத்தை அதிமுக மதித்தாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் ரஜினியை ஒப்பிட முடியாது. திமுகவிற்கு தான் ரஜினியின் அரசியல் வருகையால் பாதிப்பு ஏற்படும். இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் என்றைக்கும் மாறாது என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal