ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி!

ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கிது அலகாபாத் உயர் நீதிமன்றம்.

உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என்பது குறித்து ASI (இந்திய தொல்பொருள்) மூலம் ஆய்வு  செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டுமானத்தை அறிவியல் (carbon dating) பூர்வமாக ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யும்போது கட்டிடத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்பட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை, ‘பாதுகாக்கப்பட்ட பகுதியாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் கார்பன் டேட்டிங் கோரி இந்து தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்