Pudhucherry Governor Tamilisai soundarajan

மகளிர் இட ஒதுக்கீட்டை அனைத்து மகளிரும் கொண்டாட வேண்டும் – ஆளுநர் தமிழிசை

By

புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது.

   
   

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் கொண்டுவந்த இந்த சட்ட மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த சட்டமசோதாவானது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு 2026இல் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், சட்டமசோதா நிறைவேற்றப்படும் கால தாமதத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அனைவரும் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023