படத்துல இதெல்லாம் வேற லெவல்! பிரபல இயக்குனர் புகழாரம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படம் குறித்து பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் கூறுகையில், ‘தர்பார் படத்தில் தலைவரை பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது என்றும், படத்தில் ரஜினி இளமையாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாகவும், படத்தில் சென்டிமென்ட் மற்றும் சண்டை காட்சிகள் வேற லெவல் என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.