ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்-ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி சூலூர்,ஓட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில்,ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார், 300 துணை ராணுவப் படையினரும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment