எல்லா புகழும் சூப்பர் ஸ்டாருக்கே!!! பிரபல இயக்குநர் !!!

பேட்ட படம் நேற்று வெற்றிகரமாக திரைக்கு வந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை ரசிகர்களும் , பிரபலங்களும் கண்டு மகிழ்ந்துள்ளனர். ரசிகர்கள் இந்த  படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் நேற்று ‘பேட்ட ‘படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது , ‘ பேட்ட ‘ படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை கொடுத்துள்ளது. இந்த படம்  ரசிகர்களுக்கும் நன்றாக பிடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நன்றாக நடித்துள்ளார். இந்த ‘ புகழ் அனைத்தும் ரஜினியையே சேரும் ‘என்று தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment