குழந்தைகளை படத்தில் நடிக்க வைக்க இதையெல்லாம் பின்பற்ற வேண்டும்.!

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள், ஒடிடி தளங்களில், பெரியவர்கள் மட்டுமின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்படியான சூழ்நிலையில், அவர்களுக்கான கதாபாத்திரங்களும் ஒதுக்கப்படும் ஆனால், அவை சிறிய வயது கதாபாத்திரமாகவே மட்டுமே இருக்கும். ஒரு சில படங்களில் மட்டுமே அது முழு நீள பலமாக இருக்கும் எடுத்துக்காட்டாக பசங்க திரைப்படம். அப்படி 13-வயதுக்கு உட்பட்டவர்களை நாம் சினிமாவில் நடிக்க வைக்கும் போது அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

தற்போது மேலும் ஒரு கட்டுப்பாடாக அரசு புதிய வெளியே வைத்துள்ளது அதன்படி குழந்தை நட்சத்திரங்கள் தொடர்ந்து, 27 நாட்களுக்கு மேல் பணியாற்றக் கூடாது. அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும். பள்ளியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று வந்தாலும், அவர்களுக்கு தேவையான கல்வி கிடைப்பதை, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு குழந்தையை நடிக்க வைக்க அந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், மூன்று வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை எனவும் எச்சரிக்கை.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment