அரசு ஊழியர்கள் முன்களப் பணியாளராக இருந்து உழைக்க வேண்டும்.. ஐகோர்ட் கிளை அறிவுரை.!

ராமநாதபுரம் மாவட்டம் ராதானூரைச் சார்ந்தவர் வாசு. இவர் ராதனூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சில குற்றச்சாட்டு காரணமாக இதே ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடைக்கல் கிராம உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வாசு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஓடைக்கல் அலுவலகத்தில் மாற்ற ஜாதியனரால் எனக்கு துன்புறுத்தல் ஏற்படுகிறது. இதனால் வேலை செய்ய முடியவில்லை. எனவே பழைய இடத்திற்கே என்னை மாற்றம் செய்யவேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  கொரோனா காலத்தில் ஊழியர்கள் பலர் ஊதியமின்றி தவித்து வருகின்றனர். ஆனால் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் குறைக்கப்படவில்லை.  அமைப்புசாரா தொழிலாளர்கள் வருவாயை இழந்து வாழ்க்கை நடத்த போராடி வருகின்றனர்.

சாதி பிரச்சினையை காரணம் காட்டி இடமாற்றம் கேட்டால் எந்த இடத்திலும் மாற்று சாதியினர் வேலை செய்ய முடியாது. சொந்த ஊரில் வேலை பார்க்க வேண்டும் என அரசு ஊழியர்கள் நினைத்தால் நிர்வாகம் செயல்படாது. மேலும் மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
murugan