தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – தலைமை தேர்தல் ஆணையர்!

தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடிய அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 16வது சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் டெல்லியில் இது குறித்த சில தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் கூறியுள்ளார். அதாவது 88,000 வாக்குசாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது எனவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வந்தாலும் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட கூடிய ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பு முறை ஒரு வாய்ப்பாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் 5 பேர் மட்டுமே வேட்பாளருடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வாகனங்களுக்கு மேல் பிரச்சாரத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடிய அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணம் அது தான் !! தோனியை புகழ்ந்த ராகுல் !

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…

15 mins ago

அட்ராசக்க! 5,500Mah பேட்டரி..50MP கேமரா..அசத்தல் அம்சங்களுடன் வருகிறது vivo V30e 5G!

Vivo V30e  : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…

17 mins ago

மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…

53 mins ago

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

1 hour ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

2 hours ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

2 hours ago