#Alert:மக்களே நினைவில் கொள்க…நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் -தமிழக அரசு!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தின.இதனால்,கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்தது.ஆனால்,கடந்த சில நாட்களாக தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் நாளை (மே 8 ஆம் தேதி) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.குறிப்பாக,2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,இது தொடர்பாக,பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில்:”தமிழகத்தில் 1.50 கோடி பேருக்கு 2 ஆம் தவணை கொரோனா தடுப்பூசி இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.இதனால்,கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.எனவே,நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும”,என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,திருவாரூர் மாவட்டத்தில் நாளை (08.05.2022) ஞாயிற்றுகிழமையன்று 2080 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும்,இம்முகாமில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களும்,இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும்,பூஜோன்ஸ்டர் தடுப்பூசி செலுத்தாத அனைத்து முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.