ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – ஆட்சியர் அறிவிப்பு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது. இதில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் ஜனவரி 16-ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து விழா குழுவினருடன் இன்று ஆட்சியர் அனிஷ் சேகர் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

திட்டமிடப்பட்ட ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேதி மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கப்படும் என்றும் ஜல்லிகட்டு நடைபெறும் ஊர் பொதுமக்கள் மட்டும் பார்வையிட முடியும் எனவும் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் நபர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்