இருதுருவங்கள் ஒரே திசையில்..!பணிந்து போகுகிற வரைக்கும் தான் இந்த கூட்டணி எல்லாம்…!!!போட்டுடைக்கும் எம்.ஏல்.ஏ..!!

உத்ரபிரதேச மாநிலத்தில் இருதுருவங்களாக இருந்த மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து உத்ரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிரங்குகிறது.இந்நிலையில் அங்கு எலியும் பூனையுமாக இருந்த கட்சிகள் அங்கு தற்போது இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது.

இதற்கிடையே இவர்களின் கூட்டணி குறித்து சமாஜ்வாதிக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான அரிஓம் யாதவ் அகிலேஷ் யாதவ் மாயவதிக்கு பணிந்துபோகும் வரைக்கு தான் இந்த கூட்டணி எல்லாம் என்று தெரிவித்துள்ளார்.

Image result for hariom yadav

உத்தரப்பிரதேச வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக சிர்சாகஞ்ச் தொகுதி சமாஜ்வாதி சட்டமன்ற உறுப்பினரான அரிஓம் யாதவ் கூட்டணிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லக்னோவில் பேசிய அரிஓம் பிரோசாபாத்தில் இந்த கூட்டணி வேலைக்கு ஆகாது மற்றும் மாயாவதி சொல்லுக்கு அகிலேஷ் கட்டுப்படுகின்ற வரைக்கும் தான் இந்தக் கூட்டணி  எல்லாம் நீடிக்கும் என்று போட்டுடைத்துள்ளார். தெரிவித்தார்.