ஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா..?

நடிகை அனிகா ஹீரோயினாக மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை அனிகா சுரேந்தரன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது குயின் மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்திலும் நடித்துள்ளார், இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில் தற்பொழுது நடிகை அனிகா முதன் முதலாக ஹீரோயினாக மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.