விஜய் படத்தில் ஏன் நடித்தோம் என்று வருத்தப்பட்ட அஜித் பட நடிகை.!

விஜய் அவர்களின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்

By ragi | Published: Jul 13, 2020 10:10 AM

விஜய் அவர்களின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று அக்ஷரா கௌடா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்ஷரா கௌடா. அதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்த இவர் விஜய்யின் துப்பாக்கி படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அது மட்டுமின்றி அஜித்தின் ஆரம்பம் படத்தில் தமிழச்சி என்ற பாடலுக்கு நடனமாடியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போகன், இரும்புதிரை, மாயவன் உள்ளிட்ட பல படங்களில் அக்ஷரா கௌடா நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன். ஏனெனில் என்னை காஜல் அவர்களின் தோழியாக நடிப்பதாக கூறி தான் இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். ஆனால் என்னை அந்த படத்தில் பார்ன் சைட் நடிகையாக நடிக்க வைத்துவிட்டனர். இருப்பினும் அந்த படம் மூலம் எனக்கு நடந்த நல்ல விஷயம் விஜய், முருகதாஸ் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோரின் அறிமுகம் தான். மேலும் அவர்கள் மீது கோபம் இல்லை, மீண்டும் அவர்கள் என்னை அழைத்தால் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc