பிரபுதேவாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்.!

பிரபு தேவாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். 

நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா தற்போது பொய்க்கால் குதிரை என்ற  படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் பிரபு தேவா குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.கல்யாண் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் பாண்டிச்சேரியில் தொடங்கியது. மேலும் இந்த திரைப்படத்தில், ஜார் மரியான், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.