காற்று மாசுபாடு குறைவுதான் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த ஆண்டு டெல்லியில் காற்று மாசுபாடு குறைவுதான் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் தீபாவளி திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இதற்காக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதனையொட்டி டெல்லியில் கடும்  காற்று மாசுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,தீபாவளி இரவு  வரை உண்மையில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு மக்கள் சிலர் வெடிகளை வெடிக்க ஆரம்பித்தனர். இந்த முறை காற்று மாசுப்பாட்டை பொருத்தளவில் கடந்த 5  ஆண்டுகளில் நிலவிய அளவைவிட குறைவுதான் என்று தெரிவித்தார்.