திடீர் ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுகவின் ஐவர் குழு

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு நேற்று  ஆலோசனையில்

By venu | Published: Jul 07, 2020 12:38 PM

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு நேற்று  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகள் குறித்த ஆலோசனை நடைபெறுவது வழக்கம்.கட்சி மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்து வரும் புகார்கள் குறித்து விசாரிக்க அதிமுக சார்பில் ஐவர் குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி ,கே.பி.முனுசாமி , நத்தம் விஸ்வநாதன் ,வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.

இந்த நிலையில் தான் இந்த குழு நேற்று திடீரென கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனையில் கட்சி புகார்கள் குறித்தும்,கட்சியில் புதிய மாற்றங்கள் கொண்டுவருவது குறித்தும்,மேலும் பல பமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc