அதிமுக – அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை தீவிர படுத்தி வருகின்றனர்.

 

ஒரு புறம் அதிமுக-பாஜக கூட்டணி என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது.அதேபோல் அதிமுக -பாமக கூட்டணி என்றும் தகவல் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் கூட்டணி குறித்து  அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,எங்களை கூட்டணிக்காக யாரும் நிர்பந்திக்க முடியாது. திமுக, அமமுக தவிர யார்வேண்டுமானாலும்  கூட்டணிக்கு வரலாம்.பாஜக உடன் நிர்பந்திக்கப்பட்ட கூட்டணி அல்ல, எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.மேலும்  கூட்டணிக்கு  அவர்கள் அனைவரும் வருக வருக என்றும்  அழைப்பு விடுத்தார்.

Image result for தினகரன்

அதேபோல்  அதிமுக – அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை.மக்கள் நலத்திட்டங்களை யார் அதிகம் செய்தது என்பது குறித்து, திமுகவுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here