#BREAKING: அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிரடி நீக்கம்..!

#BREAKING: அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிரடி நீக்கம்..!

அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி  நீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.

இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி இந்த கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி  நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. வா. புகழேந்தி,( கழக செய்தித் தொடர்பாளர், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்)

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பாமக குறித்து விமர்சனம் செய்த நிலையில், இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube