சாலை மறியலில் ஈடுபட்டு கைதான ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு…!

சாலை மறியலில் ஈடுபட்டு கைதான ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு. 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். அதிமுகவினர் சட்டப்பேரவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், அதிமுக எம்ஏல்ஏக்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.

தற்போது கைதான ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம் நீக்கம் குறித்து ஓபிஎஸ் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.