அதிமுக அரசின் கையாலாகாத்தனமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம் -சீமான்

பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாது, முடிவெடுக்க மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டு இறுதிநாள் முடியும்வரை கள்ளமௌனம் சாதித்துவிட்டுத் தற்போது எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்று தமிழக ஆளுநர் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையின் முடிவைத் துளியும் மதித்திடாது மக்களாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

பாஜக அரசின் நயவஞ்சகமும், அதிமுக அரசின் கையாலாகாதத்தனமுமே கைகளுக்கு வந்த விடுதலையைத் தட்டிப் பறித்திருக்கிறது. அதற்கான தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் கட்டாயம் புகட்டுவோம் எனச் சூளுரைக்கிறேன்.ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் 161வது சட்டப்பிரிவின் கீழ் எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பொய் சொல்லாதீங்க! உத்தம வில்லன் நஷ்டம் தான்..லிங்குசாமி நிறுவனம் விளக்கம்!

Uttama Villain : உத்தம வில்லன் படம் தோல்வி படம் தான் என லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் விளக்கம் கொடுத்துள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு…

3 mins ago

வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா? – சத்யபிரத சாகு விளக்கம்

Election2024: வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம். நாட்டின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை…

17 mins ago

ஐபிஎல் தொடரின் மற்றும் ஒரு ரைவல்ரி போட்டி !! பஞ்சாப் – மும்பை இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…

3 hours ago

ஐபிஎல் 2024: போராடிய குஜராத்… இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்ற டெல்லி அணி..!

ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

12 hours ago

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் குஜராத் அணி ..!! தாக்குப்புடிக்குமா டெல்லி ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…

15 hours ago

நாங்களும் வரோம்! ரீ-ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…

15 hours ago