அதிமுக பொதுக்குழு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!

By

EPS Caviyat SCourt

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்கக் கோரி இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.  அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர். ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முறையிட ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த சமயத்தில் இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.