அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் காலமானார் !

கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் உடல்நலக்குறைவால் காலமானர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு துறையில் அமைச்சராக பதவி வகித்தார். மேலும், எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் மாநில துணைத் தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் என பல பொறுப்புகளில் பணியற்றியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, இம்மாதம் கொரோனா வைரஸில் இருந்து சற்று மீண்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி  காலமானார். தொற்றின் தீவிரத்தாலும், நுரையீரல் பாதிப்புனாலும் இன்று மாலை உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இது ஜனவரி 12 ஆம் வந்த செய்தி புகைப்படத்தில் தவறு இருந்ததால் சற்று திருத்தும் செய்யப்பட்ட செய்தி இது, தவறுக்கு மன்னிக்கவும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்