ADMK Case MHC

அதிமுக வழக்கு ஜூன் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

By

எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் ஜூன் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 7ஆம் நாள் விசாரணைக்கு பின் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் வழங்கி, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் மகாதேவன், சபீக் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே, இபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், 7வது நாள் விசாரணையில் இன்று ஓபிஎஸ் தரப்பில் இறுதி பதில் வாதங்கள் வைக்கப்பட்டது.