அதிமுக பிரமுகர் கைது

15

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், தேர்தல் ஆணையம் பல விதிகளை விதித்திருந்தது. இந்நிலையில், அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் வாணியம்பாடி அருகேயுள்ள நிம்மியம்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக கேள்விப்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது, பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த அதிமுக பிரமுகரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்தனர்.