திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுக விளம்பரம் – முக ஸ்டாலின்

வெற்றியை தடுக்கும் வகையில் திமுக மீது குறை கூறி பத்திரிக்கைகளில் அதிமுக விளம்பரம் செய்து வருகிறது என ஸ்டாலின் குற்றசாட்டு.

இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இன்று சென்னையில் பரப்புரை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் திரு.சேகர்பாபு ஆதரவு கோரி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய ஸ்டாலின், வெற்றியை தடுக்கும் வகையில் திமுக மீது குறை கூறி பத்திரிக்கைகளில் அதிமுக விளம்பரம் செய்து வருகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் செய்த குற்றங்கள் குறித்து எந்த விளம்பரமும் இல்லை.  விளம்பரம் மூலம் மக்களை திசை திருப்ப முடியாது. மக்கள் வரும் 6ம் தேதி தக்க பதிலடி கொடுப்பார்கள். மகள் வீட்டில் ரெய்டு நடத்தியவர்கள் இன்னும் 25 சீட் திமுகவுக்கு அதிகம் கிடைக்கும் என கூறினர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்