அகமதாபாத்:தூணில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து .!2 பேர் காயம் .!

குஜராத் அகமதாபாத்தில் பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து மோதி 2 பேர் காயமடைந்துள்ளனர்.

குஜராத் அகமதாபாத்தில் உள்ள அக்பர்நகர் பகுதியில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அக்பர்நகர் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து ஒன்று மோதியுள்ளது .இந்த விபத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாக நொறுங்கியது .

இந்த விபத்து தொடர்பாக அகமதாபாத்தின் பி.ஆர்.டி.எஸ் பொது மேலாளர் கூறுகையில், விபத்து நடந்த போது பேருந்தில் யாரும் இல்லை என்றும் ,அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் கன்டெக்டருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்