குட்நியூஸ்!543 நாட்களுக்குப் பிறகு…8 ஆயிரத்து கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 236 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,26,480 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  1100 குறைவு.மேலும்,543 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,26,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 236 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,66,147 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,202  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,39,46,749 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,13,584 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,17,63,73,499  பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 71,92,154 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன