கல்விக்கு வயது தடையில்லை – மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதிய பெற்றோர்.!

படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதி பெற்றோர் தேர்ச்சி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மலப்புரத்தை சேர்ந்த தொழிலதிபரான முஸ்தபாவிற்கு நுசைபாவை திருமணம் செய்து வைத்தனர். அப்போது நுசைபா பிளஸ் டூ படித்து வந்தார். திருமணம் ஆனதால் படிக்க இயலாமல் போனதால் கவலையில் இருந்து வந்தாராம். இந்த வயதிலும் படிக்க ஆசைப்படும் மனைவியின் ஆர்வத்தை கண்டு 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த முஸ்தபாவிற்கும் படிக்கும் ஆசை தொற்றி விட்டதை அடுத்து, பிளஸ் டூ தேர்வு எழுத முடிவு செய்துள்ளனர்.

அதற்காக பயிற்சி மையங்களை அணுகியதாகவும், ஆனால் அவை யாவும் கைக் கொடுக்கவில்லையாம். அப்போது தான் அவர்களின் ஊரின் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்திருந்த அறிவிப்பு பலகையில் கேரளா எழுத்தறிவு மையத்தின் சமநிலை தேர்வு குறித்து அறிந்து கொண்டனர். அதனையடுத்து அந்த தம்பதி அவரது பிளஸ் டூ படிக்கும் மகனுடன் தேர்வு எழுதி தற்போது தேர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து முஸ்தபா கூறுகையில், ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டோம். ஏனெனில் இந்த வயசில் படிக்கிறோமே என்று தயக்கம் இருந்தது. ஆனால் தேர்ச்சி பெற்று பலரின் பாராட்டுகளை பார்த்த பின் இனி வெட்கப்பட கூடாது என்று முடிவு செய்ததாகவும், பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கிணங்க மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற இந்த தம்பதியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.