வெனிசுலா அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்….ஜூவான் கெய்டோ அறிவிப்பு….!!

மதுரோ அரசுக்கு எதிராக பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

வெனிசுலா நாட்டின் அதிபருக்கு பிரகடனபடுத்தப்பட்டுள்ள ஜூவான் கெய்டோ அமெரிக்கா ,  கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.

இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெனிசுலா நாட்டின் நாடாளுமன்றத்தின்  சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெனிசுலா நாட்டின் அதிபர் மதுரோ எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்தார்.மேலும் வெனிசுலா நாட்டின் நீதிமன்றமும் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவு பிறப்பித்ததுள்ளார்.

இது குறித்து ஜூவான் கெய்டோ கூறுகையில் , மதுரோ அரசு மக்களுக்கு எதிராக ஒரு பீதியை உருவாக்குகின்றது.நாங்கள் யாரும் பயப்படவில்லை . வருகின்ற பிப்ரவரி 2_ஆம் தேதி மதுரோ_வுக்கு எதிராக மிகப்பெரியளவிலான போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment