• நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – மாதவன்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஆயுத எழுத்து படத்தில் நடிகர் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், 15 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இயக்குனர் மாதவன் இயக்கத்தில் தற்போது ‘ராக்கெட்ரி’ என்ற படம் உருவாக்கி வருகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர். அதன் பின் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை ‘ ராக்கெட்ரி ‘ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாகி வருகிறது. நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிப்பதாகவும், சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.