,
Ram Charan

11 வருடங்கள் கழித்து பெண் குழந்தைக்கு தந்தையான ராம்சரண்.!

By

நடிகர் ராம் சரண், உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல நடிகர் சிரஞ்சிவியின் மருமகளும், ராம்சரணின் மனைவியுமான உபாசனாவிற்கு இன்று அதிகாலை ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஜூன் 19 நேற்று மாலை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த உபாசனாவுக்கு இன்று காலை பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Appolo hospital
Appolo hospital [Image-PTI]

11 வருடங்கள் கழித்து குடும்பத்தில் புது வாரிசு ஒன்று நுழைந்ததால் மெகாஸ்டார் சிரஞ்சிவி குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இப்போது, ராம்சரண் மற்றும் உபாஸ்னாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 Ram Charan and Upasana
Ram Charan and Upasana [Image Source :instagram/@Upasana Kamineni]

இந்த ஆண்டு ‘RRR’ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றதாலும், இப்போது புதிதாகப் பிறந்த பெண் குழந்தையாலும் ராம் சரண் குடும்பத்தில் கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் அனைத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளது.