பெண்களின் தலையை துண்டித்திருக்கலாம்,தலிபான்களின் பல்கலைக்கழக தடையை எதிர்த்து ஆப்கானிய மாணவி

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்வியை தலிபான்கள் தடை செய்துள்ளதை எதிர்த்து, மர்வா என்ற ஆப்கானிய மாணவி  தனது ஆதங்கத்தை உலகிற்கு தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் பெண்களை தலை துண்டிக்க உத்தரவிட்டிருந்தால், அதுவும் இந்த தடையை விட சிறப்பாக இருந்திருக்கும்.அவள் மேலும், “உலகில் நான் இருப்பதற்காக வருந்துகிறேன்.

“நாங்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகிறோம், விலங்குகள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் பெண்களான எங்களுக்கு எங்கள் வீட்டை விட்டு வெளியேற கூட உரிமை இல்லை.”

மர்வா தான் அவரது  குடும்பத்தில் பல்கலைக்கழகம் செல்லும் முதல் பெண்மணி .19 வயதான அவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மார்ச் முதல் நர்சிங் பட்டப்படிப்பை தொடங்குவதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அவரது படிப்பு தொடங்க   சில மாதங்களே உள்ள நிலையில் தலிபான்களின் இந்த முட்டாள்த்தனமான உத்தரவு வந்துள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment