சூப்பர் ஹீரோயின் படத்தில் ஆடுகளம் பட நடிகை.!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் படத்தில் நடிக்க இந்தியா நடிகைகளில் டாப்சியை அழைத்துள்ளதாக

By ragi | Published: Jun 01, 2020 03:52 PM

ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் படத்தில் நடிக்க இந்தியா நடிகைகளில் டாப்சியை அழைத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் டாப்சி மற்றும் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் ரீமேக்காகும்.

இந்த நிலையில் தற்போது இவரை ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் செய்துள்ளது. இந்த நிலையில் ஒரு சூப்பர் ஹீரோயின் படத்தை எடுக்க பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் நடிக்க உலகில் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள நடிகைகளில் டிஸ்னி நிறுவனம் டாப்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியாவை பின்னணியாக கொண்ட கதையாக இந்த சூப்பர் ஹீரோயின் திரைப்படம் இருப்பதால் டாப்சிக்கு இதில் அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc