அதிமுகாவின் 48-வது வெற்றி பயணம்..!

1972ம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி தான் தற்போது ஆளுங்கட்சியாக திகழும் அதிமுக. இக்கட்சியை 1972ம் ஆண்டு அக்.17ம் தேதி எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
இதன்பின் 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கட்சி சட்டமன்ற தேர்தலில் 144 இடங்களில் வெற்றியை பெற்றனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்து 13 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார். 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். 

எம்.ஜி.ஆர் உயிரிழந்த பிறகு அதிமுக கட்சி ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆர். துணைவியார் ஜானகி அம்மாள் தலைமையிலும் இரண்டாக பிரிந்தது. இதன் பிறகு ஒன்று சேர்ந்த கட்சியில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.
1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். இதன் பின் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நிலை காரணமாக உயிரிழந்தார். இவர் 16வருடங்கள் ஆட்சியில் இருந்து சாதனை படைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி கட்சியில் இருந்து பிரிந்து அமமுக என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார். தற்போது அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
எனவே, இன்றுடன் கட்சி தொடங்கி 48 வருடங்களான நிலையில் இன்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ பொம்மை வைத்து வழிப்பட்டனர்.

author avatar
Vidhusan