அனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....

அண்ணா தி.மு.காவில்  ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர்

By kaliraj | Published: May 19, 2020 08:50 PM

அண்ணா தி.மு.காவில்  ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கட்சியினருக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.  அதில், ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி அதிமுக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன என்றும், இதுவரை ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோல அ.தி.மு.க.வில் தொழில் நுட்ப பிரிவும் சென்னை, கோவை, மதுரை மற்றும் வேலூர் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc