ஜார்க்கண்ட் மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களில் இன்று முதல் 50 பேருக்கு அனுமதி.!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வழிபாட்டுத் தலத்திற்குள் ஒரே நேரத்தில் 50 பேருக்கு நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் முக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் மீண்டும் திறக்க மாநில அரசு அனுமதித்தது. ஆனாலும், கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படலாம். மேலும், வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சுக்தேவ் சிங் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் படி, பக்தர்கள் அனைவரும் சிலைகள், புனித நூல்கள் மற்றும் மணிகளைத் தொடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாய்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும், பக்தர்கள் பாடவோ, பேசவோ ஒன்றாக உட்கார கூடாது. அதுமட்டுமின்றி, பூசாரிகள் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கவோ, அவர்கள் மீது தண்ணீர் தெளிக்கவோ கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.