11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 24-ம் தேதி முதல் தொடங்கும்- அமைச்சர் செங்கோட்டையன்!

11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 24-ம் தேதி முதல் தொடங்கும்- அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது.

அந்தவகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிழும் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் அவர் வெளியிட்ட அரசாணையில், 11 -ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, வரும் 24 -ம் தேதி முதல் நடைபெறும் எனவும், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேரும் 2 முதல் 10 -ம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 17 -ம் தேதி முதல் தொடங்கும்.

அதுமட்டுமின்றி, மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளே இலவச பாடப்புத்தககங்கள் மற்றும் நோட்டுகள், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்படும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.